இப்படி நடிக்கும் நிலை வந்தால் திரையுலகை விட்டே விலகி விடுவேன்! அதிர்ச்சி கொடுக்கும் மீனா..!

Published : Mar 21, 2020, 10:37 AM IST
இப்படி நடிக்கும் நிலை வந்தால் திரையுலகை விட்டே விலகி விடுவேன்! அதிர்ச்சி கொடுக்கும் மீனா..!

சுருக்கம்

தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  90களில், முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், அஜித், அர்ஜுன், முரளி, பார்த்திபன், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, அழகு கண்களால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.  

தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  90களில், முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், அஜித், அர்ஜுன், முரளி, பார்த்திபன், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, அழகு கண்களால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

மேலும் செய்திகள்: தாய்மை பேரழகு..! விதவிதமான உடையில் கர்ப்பமாக இருக்கும் ரகரகமான புகைப்படம் வெளியிட்ட ஆலியா! போட்டோ கேலரி!

வெள்ளித்திரையில் மார்க்கெட் குறைந்ததும், சின்னத்திரை சீரியல் நாயகியாக மாறினார். பின்னர் தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

சமீபகாலமாக, மலையாளம்,  தெலுங்கு ஆகிய மொழி படங்களில் அக்கா, அண்ணி, போன்ற கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார். மேலும்  சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

மேலும் செய்திகள்: காதல் கணவருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்த மழை! அமலாபால் ஹாட் வெட்டிங் போட்டோஸ்!
 

பல வருடங்களுக்குப் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல் முறையாக  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடைய மகள் நைனிகா, தளபதி விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மீனா, கதாநாயகனின் அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்கிற நிலை வந்தால் நடிப்புக்கே முழுக்கு போட்டுவிடுவேன் என அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: அவரச அவசரமாக நடந்து முடிந்தது அமலாபாலின் இரண்டாவது திருமணம்..!
 

இது போன்ற கதாபாத்திரங்கள் தன்னை வயதானவராக காட்டும்,  என்பதாலேயே இதுபோன்ற வேடங்களை தவிர்ப்பதாகவும், வெப் சீரிஸ்களில் நடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக மீனா தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!