23 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு குவிந்த ரசிகர்கள் வாழ்த்து.! மன்னிப்பு கேட்டு நெகிழ வைத்த சாயிஷா!

Published : Aug 13, 2020, 06:21 PM IST
23 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு குவிந்த ரசிகர்கள் வாழ்த்து.! மன்னிப்பு கேட்டு நெகிழ வைத்த சாயிஷா!

சுருக்கம்

நடிகையும், பிரபல நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, நேற்று தன்னுடைய 23 ஆவது பிறந்தநாளை, கணவர் மற்றும் குடும்பத்துடன் மிகவும் பிரமாண்டமாக வீட்டிலேயே கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  

நடிகையும், பிரபல நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, நேற்று தன்னுடைய 23 ஆவது பிறந்தநாளை, கணவர் மற்றும் குடும்பத்துடன் மிகவும் பிரமாண்டமாக வீட்டிலேயே கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: அழகை பார்க்காமல்... மனதை பார்த்து திருமணம் செய்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றிய தகவல்..!
 

தமிழில், நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'வனமகன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்க துவங்கினார். அப்படி நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இத்தனை ஆரம்பத்தில் இருவருமே வெளிப்படுத்தவில்லை என்றாலும், பின்னர் திருமண அறிவிப்பை வெளியிட்டு, காதல் சமாச்சாரத்தை கசியவிட்டனர்.  திருமணத்திற்கு பின் தற்போது ஆர்யாவுடன் ’டெடி’ என்ற படத்தில் மட்டுமே நடித்து கொண்டு இருக்கிறார் சாயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: நட்சத்திர ஜோடி சினேகா - பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..! வாங்க பார்த்துட்டு வரலாம்..!
 

இந்த நிலையில் நேற்று தனது பிறந்த நாளை சாயிஷா கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து இன்று அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த பிறந்தநாள் உண்மையிலேயே எனக்கு மிகவும் மிகச்சிறந்த பிறந்தநாள். என்னை வாழ்த்துவதற்காக நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிகவும் நன்றி. இந்த நாளை நான் மிகவும் சிறப்பான நாளாக நினைக்கிறன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் நான் இங்கே இருக்க முடியாது. ரசிகர்களின் ஒவ்வொரு வாழ்த்திற்கும் என்னால் பதிலளிக்க முடியவில்லை என்பதற்காக மன்னித்து விடுங்கள் என,கூறி பிறந்தநாள் அன்று எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!