சாவித்திரி - ஜெமினி கணேசன் மகள் 'விஜய சாமுண்டீஸ்வரியை' யார் தெரியுமா...?

 
Published : May 18, 2018, 07:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
சாவித்திரி - ஜெமினி கணேசன் மகள் 'விஜய சாமுண்டீஸ்வரியை' யார் தெரியுமா...?

சுருக்கம்

savithiri jaminiganesan daugther vijaya samundeshwari photo

தமிழ் சினிமாவில் 'நடிகையர் திலகம்' என்கிற அந்தஸ்தைப் பெற்று உச்சத்தை தொட்ட நடிகையாக இருந்தவர் நடிகை சாவித்திரி தேவி. 

இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தைப் பார்த்து பல பிரபலங்கள், படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஷ்வினையும், இதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷையும் பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தை எடுக்க, அஷ்வினுக்கு உதவியாக இருந்தவர். சாவித்திரி - ஜெமினிகணேசன் மகள் விஜய சாமுண்டீஸ்வரி. 

இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கொடிக்கட்டிப் பறந்த இரு ஜாம்பவான்களின் மகளாக 'விஜய சாமுண்டீஸ்வரி' இருந்தாலும் பலரும் இவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபலங்கள் அனைவரும் கலந்துக்கொண்ட பிரஸ் ஷோவின் கலந்துக்கொண்டு கீர்த்தி சுரேஷுடன் இந்த படத்தை பார்த்து ரசித்தார். மேலும் இவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

'விஜய சாமுண்டீஸ்வரி' என்று சாவித்திரி இவருக்கு பெயர் விதத்திலும் ஒரு அர்த்தம் உள்ளது. சாவித்திரியின் சினிமா வாழ்க்கையில் ஏணியாக இருந்தவர்கள் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தார். மேலும் இவர் விரும்பி வணங்கி வந்த பெண் கடவுள் சாமுண்டிஸ்வரி. 

இதனால் தன்னுடைய மகளுக்கு 'விஜய சாமுண்டீஸ்வரி' என பெயர் சூடினார் சாவித்திரி. சாவித்திரி - ஜெமினி கணேசனை திருமணம் செய்துக்கொண்டதும் சாமுண்டீஷ்வரி கோவிலில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் புகைப்படம் இதோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?