சத்யா படத்தின் டிரைலர் வெளியானது; போலீஸ், ரிப்போட்டர் என இரட்டை வேடத்தில் சிபிராஜ்?…

 
Published : Jun 17, 2017, 10:33 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
சத்யா படத்தின் டிரைலர் வெளியானது; போலீஸ், ரிப்போட்டர் என இரட்டை வேடத்தில் சிபிராஜ்?…

சுருக்கம்

Satyam trailer was released Sibiraj in dual role as police and a reporter

சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள் படம் சத்யா.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

இவரைத் தொடர்ந்து முக்கிய ரோலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி நடிக்கிறாராம். இவர்களுடன் ஆனந்தராஜ், சதீஷ், ரவி வர்மா மற்றும் சித்தார்த் சங்கர் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

கிரைம், த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்திற்கு சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தெலுங்கில் வெளிவந்த ‘ஷனம்” படத்தின் தமிழ் ரீமேக்.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய சிபிராஜ், தன்னுடையச் சொந்த நிறுவனமான நாதாம்பாள் ஃபிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.

தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 2.05 நிமிடம் இந்த டிரைலர் ஓடும்.

இதில், சிபிராஜ் இரட்டை வேடங்களில் இருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் காவல் அதிகாரி வசந்த் மேனனாகவும், இன்னொருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பத்திரிக்கையாளராக வேலை பார்க்கும் சத்யாவாகவும் நடித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!