உள்ளத்தை உருக வைக்கும் இசையும் காதலும் சுற்று.. அருளினிக்கு காத்திருந்த சர்ப்பைரஸ் - இந்த வார சரிகமப அப்டேட்!

Published : Jun 01, 2024, 05:35 PM IST
உள்ளத்தை உருக வைக்கும் இசையும் காதலும் சுற்று.. அருளினிக்கு காத்திருந்த சர்ப்பைரஸ் - இந்த வார சரிகமப அப்டேட்!

சுருக்கம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அர்ச்சனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.   

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டு நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் இசையும் காதலும் சுற்று நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக இணைந்து பாடல்களை பாட உள்ளனர். போட்டியாளர்களை தனித்தனியாக மதிப்பிட்டு மதிப்பெண் கொடுத்துள்ளனர். 

அந்த வகையில் அருளினி சுத்தி சுத்தி வந்தீங்க என்ற  பாடலை பாடி நடுவர்களை அசர வைத்துள்ளார். அதன் பிறகு சைந்தவி மேடைக்கு வந்து நீ இதெல்லாம் கேட்டயாமே என்று சொல்லி சில பொருட்களை கொடுக்க அதை பார்த்ததும் அம்மா வந்திருக்காங்களா?  அனுப்பிய மாதிரியே இருக்கு என்று சொல்ல அவரது அம்மா என்ட்ரி கொடுத்து 7 வயசு வரை பேசாத அருளினி இணைக்கு பல மொழிகளில் பேசுறா என்று பெருமையாக பேசியுள்ளார். அம்மா மகளின் பாசத்தால் அரங்கமே கண் கலங்கியுள்ளது. 

இதனை தொடர்ந்து உருகி உருகி போனதடி என் உள்ளம் பாடலை பாடி கவர்ந்த ஹமன் வழக்கம் போல அரைகுறை தமிழில் பேசி அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார். உடம்பு முடியாத நிலையில் சிறப்பாக பி[பாடி பாராட்டுகளை பெற்றுள்ளார். 

மரக்காணம் சரண் கோடி அருவி கொட்டுதே என்ற பாடலை பாடி முதல் முறையாக கோல்டன் ஷவரை பெற்றுள்ளார். அதே போல் முகேஷ் மற்றும் பொக்கிஷா ஆகியோர் இணைந்து பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடலை நடுவர்களை கவர்ந்துள்ளனர். 

சரத் சாரங்காவுடன் இணைந்து பூக்கள் பூக்கும் தருணம் பாடலை பாடி அசத்த சரத்தின் திறமையை மீண்டும் நடுவர்கள் சுட்டி காட்டி பாராட்டியுள்ளனர். இப்படி பல நெகிழ்ச்சியான தருணங்களுடன் சரிகமப நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. எனவே சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?