
புதுக்கோட்டையில் பிறந்து, கலையுலக கனவோடு சென்னை மாநகருக்கு பயணித்த கலைஞன் தான் திருச்செல்வம். கடந்த 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட்டான மெட்டி ஒளி என்ற சீரியல் மூலம் இவர் நடிகராகவும் உதவி இயக்குனராகவும் தனது கலையுலக பயணத்தை தொடங்கினார்.
மெட்டி ஒளி சீரியலை இயக்கியது திருமுருகன் என்பது அனைவரும் அறிந்ததே, அவர் எம்டன் மகன் மற்றும் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்று இரு படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ஆவார். இந்நிலையில் அவருடைய சீரியலில் நடித்த திருச்செல்வன் 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 1533 எபிசோடுகள் ஓடி சூப்பர் ஹிட்டான கோலங்கள் என்ற நாடகத்தை இயக்கி பிரபல இயக்குனராகவும் அவர் மாறினார்.
Shabana Photos: ஆரியன் எங்கே... கையில் பூக்களோடு தனிமையில் இனிமை காணும் ஷபானா! வைரலாகும் போட்டோஸ்!
தொடர்ச்சியாக அல்லி ராஜ்ஜியம், பொக்கிஷம், சித்திரம் பேசுதடி போன்ற பல நாடகங்களை அவர் இயக்கி சின்னத்திரையின் முக்கிய இயக்குனராக மாறினார். இந்த சூழலில் தான் கடந்த 2022ம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்க துவங்கினர் திருச்செல்வம். இன்று சின்னத்திரை TRPயில் சூப்பர் ஹிட்டாக ஓடி வரும் சீரியலாக மாறியுள்ளது எதிர்நீச்சல்.
மாரிமுத்துவின் மரணம்
இயக்குனர் மற்றும் நடிகரான மாரிமுத்து தான் இந்த சீரியலின் உயிர் நாடி என்றால் அது மிகையல்ல. அவருக்காகவே இந்த சீரியலை பார்த்த பலர் உண்டு. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி இடியென வந்த செய்தி தான் மாரிமுத்துவின் மரணம். ஒட்டுமொத்த எதிர்நீச்சல் குடும்பமும் நிலைகுலைந்த தருணம் அதுவென்றே கூறலாம்.
அதன் பிறகு தான் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் என்ற அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த சீரியல் என்ற பெயரை எதிர்நீச்சல் பெற்று வருகின்றது. இந்நிலையில் விரைவில் அந்த சீரியல் முடியவில்ல நிலையில், இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் ஒரு விஷேஷம் நடக்கவுள்ளது.
திருச்செல்வம் வீட்டில் விஷேஷம்
இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் மகள் ப்ரியதர்ஷினிக்கு வரும் ஜூன் மாதம் 10ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. ஆகையால் திருமண நிகழ்வுகளை இப்பொது விறுவிறுப்பாக நடத்தி வருகின்றார் அவர். பல்வேறு பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.