Garudan Review : சூரி ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டினாரா?... சொதப்பினாரா? கருடன் படத்தின் விமர்சனம் இதோ

By Ganesh A  |  First Published May 31, 2024, 10:15 AM IST

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.


இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் துரை செந்தில்குமார். சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி, பட்டாஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் சுமார் 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இயக்கியுள்ள திரைப்படம் தான் கருடன்.

கருடன் திரைப்படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார். அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன், பிரிகிடா, ரோஷினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். கருடன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்நிலையில், கருடன் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... சன் டிவி சீரியல்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல்.. இந்த வார டாப் 10 சீரியல்களின் TRP லிஸ்ட்

சூரி மற்றும் சசிகுமாரின் நடிப்பு சூப்பர். உன்னி முகுந்தனின் காட்சிகள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். ஷிவதாவின் நடிப்பு நன்றாக உள்ளது. காட்சியமைப்பு மற்றும் பின்னணி இசை பக்காவாக உள்ளது. பழைய கதையாக இருந்தாலும் சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் துரை செந்தில்குமார். அழுத்தமான, விறுவிறுப்பான கிராமத்து ஆக்‌ஷன் டிராமாவாக கருடன் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

(Tamil|2024) - THEATRE.

Soori & Sasi Superb. Unni’s Transformation could hv been stronger. Shivada gud. Visuals & BGM Pakka. Oldage Story & Predictable flow; But Well Written Screenplay & Direction by Senthilkumar. A Violent, Intense & Engaging Rural Action Drama. GOOD! pic.twitter.com/PgLVdvtA73

— CK Review (@CKReview1)

கருடன் திருப்திகரமான கிராமத்து படமாக உள்ளது. ஒவ்வொரு கேரக்டரும் அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மூன்று நண்பர்களுக்கு இடையேயான நட்பு, பகை மற்றும் ஈகோ தான் இப்படம். சூரியின் நடிப்பு வேறலெவல். சசிகுமார் சரியான தேர்வு. உன்னி முகுந்தன் சிறப்பாக நடித்துள்ளார். ஷிவதாவின் ரோலும் அருமை. டெக்னிக்கல் ரீதியிலும் சிறப்பாக உள்ளது. யுவனின் இசை வேறலெவல், எடிட்டிங் வாவ் ரகம். துரை செந்தில்குமாரின் விறுவிறுப்பான திரைக்கதையும் நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

3.5/5 A sincere & satisfying rural action drama that is well written with each and every character established convincingly. It’s all about friendship, ego and betrayal between three men played brilliantly by (who is extraordinary), (Perfect… pic.twitter.com/wdo0Ybon1v

— sridevi sreedhar (@sridevisreedhar)

கருடன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ராவான எமோஷன்கள் அடங்கிய சிறந்த கிராமத்து ஆக்‌ஷன் படம். சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனுக்கு சரியான வேடம். இண்டர்வெல், கிளைமாக்ஸில் சூரியின் சம்பவம் வெறித்தனமாக உள்ளது என பதிவிட்டு இருக்கிறார்.

Good rural action drama...
Racy screenplay with strong emotion and raw action...

Good role for Sasikumar & Unni Mukunthan...

Interval, Preclimax, Climax Soori na Sambhavam🔥🔥🔥 pic.twitter.com/M5WkbwSKaH

— Karthik Ravivarma (@Karthikravivarm)

இதையும் படியுங்கள்... VJ Siddhu : டிடிஎப் செய்த அதே தப்பை பண்ணிருக்காரே... கைதாகிறாரா விஜே சித்து? யூடியூப் வீடியோவால் வந்த சிக்கல்

click me!