கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்துள்ள PT சார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
யூடியூப் மூலம் வைரல் ஆன பிரபலங்களில் ஹிப் ஹாப் ஆதியும் ஒருவர். தமிழில் ஹிப்ஹாப் பாடல்களை பிரபலமாக்கிய பெருமை ஆதியையே சேரும். இவரது கிளப்புல மப்புல பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனதால் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகினார் ஆதி. இதையடுத்து சுந்தர் சி இயக்கிய ஆம்பள படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆதி. இதையடுத்து தன்னுடைய சொந்த வாழ்க்கை கதையையே படமாக இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார்.
மீசைய முறுக்கு என்கிற பெயரில் ரிலீஸ் ஆன அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் முழுநேர ஹீரோவாக களமிறங்கிய ஆதி, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு, வீரன் போன்ற படங்களில் நடித்தார். அவ்வப்போது சில படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 படத்திற்கும் இசையமைத்து இருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு இவரது இசை மற்றும் பாடல்களும் முக்கிய பங்காற்றி இருந்தன.
இதையும் படியுங்கள்... 'தனி ஒருவன் 2' படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாகும் பாலிவுட் ஹீரோ! மோகன் ராஜாவின் வேற லெவல் செலக்சன்!
இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்துள்ள மற்றுமொரு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படத்தின் பெயர் PT சார். இதில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார். மேலும் நடிகை அனிகா சுரேந்திரன், இளவரசு, பாண்டியராஜன், முனீஷ்காந்த், பாக்கியராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி இருக்கிறார்.
இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன், தமிழில் இதற்கு முன்னர் ரியோ ஹீரோவாக அறிமுகமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கியுள்ள இரண்டாவது படம் தான் PT சார். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆழமான கருத்துடன் வந்துள்ள இப்படம் திரைக்கதையில் சோபித்ததா என்பதை படம் பார்த்த ரசிகர்கள் நம்முடைய ஏசியாநெட் தமிழ் யூடியூப் சேனலுக்கு தெரிவித்துள்ளனர். அதனை இந்த வீடியோவில் பார்க்கலாம்...
இதையும் படியுங்கள்... நான் உயிரோட தான் இருக்கேன்... இன்ஸ்டாவில் காணாமல் போன கோட் பட நடிகையின் கம்பேக் கவர்ச்சி போட்டோஸ் இதோ