
நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். கடந்த சில மாதங்களாக செப்சிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தார். அந்த நோய் பாதிப்பால் அவரின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கியதால், அவர் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு நேற்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. சரத்பாபுவின் மறைவு தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று மாலை ஐதராபாத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமான தெலுங்கு நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படியுங்கள்... சரத்பாபுவிற்கு இப்படி ஒரு கடைசி ஆசை இருந்ததா? அடடா... கடைசிவரை நிறைவேறாமலே போயிருச்சே!
இதையடுத்து இன்று காலை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட நடிகர் சரத்பாபுவின் உடல், தி-நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதலே சுஹாசினி, ராதிகா, சரத்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், சரத்பாபுவின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிண்டியில் உள்ள தொழிற்பேட்டை அருகே உள்ள மின் மயானத்தில் தான் நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாம். அவருக்கு வாரிசு இல்லாததால் குடும்பத்தினர் தான் இறுதிச்சடங்குகளை செய்வார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... என்ன ரொம்ப நாள் வாழ சொல்லிட்டு, சரத்பாபு சீக்கிரமா போயிட்டாரு - அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.