#Santhanam|தனது ஜாதிக்கு வரிந்து கட்டும் சந்தானம்.....!. படத்தில் உயர்வு தாழ்வு கூடாது என எச்சரிக்கை..

Kanmani P   | Asianet News
Published : Nov 16, 2021, 08:43 PM ISTUpdated : Nov 16, 2021, 09:09 PM IST
#Santhanam|தனது ஜாதிக்கு வரிந்து கட்டும் சந்தானம்.....!. படத்தில் உயர்வு தாழ்வு கூடாது என எச்சரிக்கை..

சுருக்கம்

சபாபதி பட விழாவில் படங்களில் உயர்வு தாழ்வு கூடாதென சந்தானம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையில் கலக்கி வரும் சந்தானம துணை நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். நக்கலுக்கு பெயர் போன சந்தானம் விஜய், உதயநிதி, ஆர்யா, அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களின் தோழனாக நடித்துள்ள காட்சிகள் மனதில் பதிந்தவையாகவே இருக்கும். பின்னர் கமெடியனிலிருந்து நாயனாக தன்னை திசை திருப்பிய சந்தானம் காமெடி சார்ந்த கதைகளையே தேர்ந்தெடுத்து வருகிறார்.

அந்த வகையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் முதல் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா வரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவரது நடிப்பில் வந்த படங்களின் வெற்றியில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும் தனது பாதையை மாற்றாத நடிகர் சந்தானம் தற்போது 'சபாபதி' என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திலிருந்து சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டரில் ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று இடம்பெற்றிருந்ததால் அந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் இல்லையேல் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு சபாபதி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என  எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த படத்திற்கான ப்ரோமோஷன் விழாவில் பேசிய சந்தானம் ;   திரைப்படங்களில் ஒருவரது உயர்த்தி கட்டுவதற்காக மற்றவர்களை தாழ்த்தி காட்டுவது முறையல்ல என தெரிவித்துள்ள சந்தானம், பட விளம்பர வேலைகளில் இருந்தால் ஜெய் பீம் பற்றி தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.  இவ்வாறு சந்தானம் தெரிவித்திருப்பது வன்னியர் சமூகத்தை சேர்ந்த சந்தானம் தனது ஜாதிக்கு வரிந்து கட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!