
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதை காமெடி மூலம், கட்டி போட்ட நடிகர்களில் ஒருவர், சந்தானம். இவர் ஹீரோக்களை கூட அசால்டாக கலாய்த்து, காமெடி பண்ணும் காட்சிகள் சான்ஸே இல்லை. ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும்.
சமீப காலமாக சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்ததில் இருந்து, முன்னணி நடிகர்களுடன் காமெடி காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விட்டு, ஹீரோவாக நடிக்கும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் ஹீரோவாக நடித்து வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 , A1 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு வெற்றி படமாக அமைத்தது.
இந்நிலையில் அப்பா சந்தானத்தையே மிஞ்சும் அளவிற்கு டிக் டாக் செயலி மூலம் தன்னுடைய நடிப்பை சுட்டி தனத்தோடு வெளிக்காட்டி வருகிறார் சந்தானத்தின் மகள் ஹாசினி. ஏற்கனவே இவர் டிக் டாக் செய்த சில வீடியோக்கள் வைரலாகா ரசிகர்களால் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இவர் புதிதாக தன்னுடைய தந்தையுடன் செய்து டிக் டாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.