வெற்றிமாறனால் வந்த வினை... படுக்கையறை சீனுக்கே கூப்பிடுறாங்க... பிரபல நடிகையின் வேதனை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 23, 2020, 05:21 PM IST
வெற்றிமாறனால் வந்த வினை... படுக்கையறை சீனுக்கே கூப்பிடுறாங்க... பிரபல நடிகையின் வேதனை...!

சுருக்கம்

வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளில் மிகவும் நெருக்கமாக நடித்தது தவறாக போய்விட்டதாகவும், அதனால் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே அதிக அளவில் வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். 

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆண்ட்ரியா. இதையடுத்து கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், விஸ்வரூபம் வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

கடந்த 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் இயக்குநர் அமீருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் நடுக்கடலில் படகில்  அமீர், ஆண்ட்ரியா ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கினார் வெற்றிமாறன். ஆனால் படம் ரிலீஸிற்கு பிறகே காட்சி நீக்கப்பட்டதால், அதில் ஆண்ட்ரியா டாப்லெஸ்ஸாக நடித்தது சோசியல் மீடியாவில் வைரலானது. 

தற்போது மாஸ்டர், அரண்மனை 3, வட்டம், மாளிகை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள ஆண்ட்ரியா, வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளில் மிகவும் நெருக்கமாக நடித்தது தவறாக போய்விட்டதாகவும், அதனால் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே அதிக அளவில் வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். 

மேலும் நல்ல கதை, கதாபாத்திரம் கிடைத்தால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்க தயாராக உள்ளதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு
பிரம்மாண்ட கூட்டணி! ‘டேவிட் ரெட்டி’ படத்தில் ராம் சரண் - சிம்பு கேமியோ? மிரட்டும் அப்டேட்!