
ஜல்லிக்கட்டு போராட்டத்தில், காது வலிக்கும் அளவிற்கு காட்டு கத்து கத்தி, பல ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!
இவர் தான் ஜெயிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏனோ... கிடைத்தது ஏமாற்றமே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேமரா இருப்பதை மறந்து, சில விஷயங்களை செய்ததால் சர்ச்சையில் சிக்கினார்.ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் அனைவரையும் கடுப்பாக்கியது. அதனால் பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாது, தமிழக ரசிகர்களிடம் ஜூலிக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சியது. அப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மெயின் கன்டன்ட்டாக இருந்தவர் ஜூலி தான்.
இதையும் படிங்க: படுக்கையறையில் நண்பருடன் கிளுகிளுப்பு குத்தாட்டம் போட்ட ஷெரின்... வைரலாகும் வீடியோ...!
அவ்வப்போது சோசியல் மீடியாவில் போட்டோ வெளியிட்டு நானும் இருக்கேன்... நானும் இருக்கேன் என காட்டிக் கொண்டு வருகிறார். என்னதான் விதவிதமாக போட்டோ போட்டாலும் ஜூலிக்கு கிடைப்பது என்னவோ அவமானம் தான். அவரது போட்டோவை பார்த்தாலே நெட்டிசன்கள் கழுவி ஊத்த ஆரம்பித்துவிடுகின்றனர்.
இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜூலி, செம்ம மேக்கப்பில் ஜொலி, ஜொலிக்கும் நகைகள் அணிந்தபடி கலர்புல்லாக இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ஜூலி ஆர்மி, ஜல்லிக்கட்டு ஜூலியா இது என வாய்பிளந்து போகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.