தினமும் ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு வயிராற உணவு... களத்தில் இறங்கி கலக்கும் பிரபல நடிகர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 15, 2020, 2:03 PM IST
Highlights
மும்பையில் உள்ள சாவர்கர் ஷெல்டர்ஸ் என்ற அமைப்புடன் இணைந்து சஞ்சய் தத் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகிறார். 
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர வைரஸின் தாக்கத்தில் இருந்து 4 லட்சத்து 84 ஆயிரத்து 597 பேர் மீண்டு வந்துள்ளனர். உலகம் முழுவதும் 210 நாடுகளை ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸை அழிக்க மருந்து இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தனிமனித விலகல் ஒன்றே சரியான தடுப்பு முறை என்பதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி தவிக்கும் கூலித்தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக ஏராளமான தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி சேவையாற்றி வருகின்றன. திரைப்பிரபலங்கள் பலரும் பசியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: வெளிநாட்டில் இருக்கும் விஜய் மகனின் தற்போதைய நிலை என்ன?... உண்மை நிலவரம் இதுதான்...!

இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மும்பையில் பசியால் வாடும் ஏழை மக்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் உணவளித்து வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகரான சஞ்சய் தத் உணவின்றி தவிக்கும் ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளார். 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

மும்பையில் உள்ள சாவர்கர் ஷெல்டர்ஸ் என்ற அமைப்புடன் இணைந்து சஞ்சய் தத் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகிறார். தற்போது நாடு இருக்கும் நெருக்கடி நிலையில், இயன்ற வழியில் ஒருவருக்கொருவர் உதவி வருவதாகவும், என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவ முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 
click me!