நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Published : Apr 15, 2020, 01:26 PM ISTUpdated : Apr 15, 2020, 01:29 PM IST
நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா? வெளியான அதிர்ச்சி தகவல்!

சுருக்கம்

பிரபல நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர், வீட்டிலேயே தனிமையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருவதாக, வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

பிரபல நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர், வீட்டிலேயே தனிமையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருவதாக, வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தெலுங்கு திரைப்படங்கள் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் 'உனக்கு 20 எனக்கு 18 ' படத்தின் மூலம் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார்.  த்ரிஷா நாயகியாக நடித்த இந்த படத்தில், அவரையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு கவர்ச்சியை காட்டி தமிழ் ரசிகர்களை ஈர்த்தார் ஸ்ரேயா.



இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். கிட்ட தட்ட 10 வருடங்களாக, முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர், கடைசியாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, AAA படத்தில் நடித்தார்.

ஏற்கனவே பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, இந்த படம் தோல்வி அடைந்ததால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவெடுத்தார்.



அதன் படி, ரஷ்யாவை சேர்ந்த காதலர் ஆண்ட்ரு என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, பின்னர் திருமணம் குறித்து ரசிகர்களுக்கு அறிவித்தார். தற்போது தன்னுடைய கணவர் ஆண்ட்ருவுடன், ஸ்பெயினில் வசித்து வருகிறார் ஸ்ரேயா. 

சமீபத்தில் கூட, கணவர் ஆண்ட்ரு தனக்கு வீட்டு வேலைகள் செய்ததற்கு அன்பு பரிசாக முத்தம் கொடுக்கும் வீடியோவை ஸ்ரேயா வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் வைரலாகியது.


இதை தொடர்ந்து, தற்போது ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ருவுக்கு திடீர் என கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை  ஸ்ரேயா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவர்கள் உரிய மருந்துகள் கொடுத்து, வீட்டில் தனிமையில் இருந்தபடி சிகிச்சை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன் படி தற்போது ஸ்ரேயாவும், அவருடைய கணவரும் வீட்டிலேயே தனிமையில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஸ்ரேயாவின் கணவரும் தற்போது நன்கு உடல் நலம் தேறி வருகிறாராம்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!