வாத்தி கம்மிங் பாடலுக்கு வேட்டியை மடித்து கட்டி குத்தாட்டம் போட்ட நடிகை பிரகதி! இந்த வயதிலும் என்ன ஆட்டம்!

Published : Apr 15, 2020, 12:21 PM IST
வாத்தி கம்மிங் பாடலுக்கு வேட்டியை மடித்து கட்டி குத்தாட்டம் போட்ட நடிகை பிரகதி! இந்த வயதிலும் என்ன ஆட்டம்!

சுருக்கம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக, திரைப்படம் மற்றும் சீரியல் பணிகள் மொத்தமாக முடங்கியுள்ளதால், பிரபலங்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு ஆட்டம்,  பாட்டம் என ஜாலியாக என்ஜோய் செய்து வருகிறார்கள்.  

ஊரடங்கு உத்தரவு காரணமாக, திரைப்படம் மற்றும் சீரியல் பணிகள் மொத்தமாக முடங்கியுள்ளதால், பிரபலங்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு ஆட்டம்,  பாட்டம் என ஜாலியாக என்ஜோய் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு, தங்களுடைய வெர்ஷனில் ஆட்டம் போட்டு, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.



அந்த வகையில் ஏற்கனவே, விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா, போன்ற பலர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ள நிலையில், பிரபல நடிகை பிரகதி, சும்மா வேட்டியை மடித்து கட்டி இளைஞர் ஒருவருடன் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.

இவர் தமிழில் கடந்த 1994 ஆம் ஆண்டு 'வீட்டில விஷேஷங்க' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து, பெரிய மருது, சும்மா இருங்க மச்சான் போன்ற படங்களில் நடித்தார். கதாநாயகியாக திரையுலகில் இவரால் நிலைக்க முடியாவிட்டாலும், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.



மேலும் தற்போது அரண்மனை கிளி சீரியலில் வெயிட்டான மாமியார் ரோலில் நடித்து வருகிறார். தற்போது 44 வயதாகும் நடிகை பிரகதி, வாத்தி கம்மிங் பாடலுக்கு போட்டுள்ள ஆட்டம் பார்பவர்களையே வியக்க வைத்துள்ளது.

அந்த வீடியோ இதோ... 

"

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!