Nayanthara Birthday : சந்திரமுகி ஸ்டைலில் நயன்தாராவுக்கு வாழ்த்து பதிவிட்ட சமந்தா!!

By Kanmani PFirst Published Nov 18, 2021, 3:34 PM IST
Highlights

 இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நயன்தாராவுக்கு  நடிகை சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சரத்குமார் துவங்கி சூப்பர் ஸ்டார் வரை தமிழ் திரையுலக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. மற்ற ஹீரோயின் போலவே வெறும் கனவு கன்னியாக பார்க்கப்பட்ட நயன்தாரா அறம், மாயா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் ,கோலமாவு கோகிலா, டோரா என் தாமஸ் என்ட்ரி கொடுத்தார். இதன் பிறகு லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படடர் நயன்தாரா. பின்னர் விஸ்வாசம், தற்போது  வெளியான அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இவரது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடிய வீடியோக்கள் நேற்று இரவு முதலே செம்ம வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க உள்ள, புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 நயன்தாராவின் புதிய படத்தை அவருடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனுபம்கெர், நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மிகவும் வித்தியாசமாக ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.

இதற்கிடையே  காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ள நயன்தாரா, சமந்தா நாயகன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் ரவுடி பேபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா சந்திரமுகி ஸ்டைலில் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் அவள் வந்துவிட்டாள்
அவள் கண்டாள்
அவள் துணிந்தாள்
அவள் கனவு கண்டாள்
அவள் நிகழ்த்தினாள் மற்றும்
அவள் வென்றாள் !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன் இரு இதயங்கள் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

She came
She saw
She dared
She dreamed
She performed and
she conquered !!
Happy birthday Nayan 💕 pic.twitter.com/FXoWzuuhY3

 

click me!