Vijay | விஜயின் அன்சீன் போட்டோ ; வைரலாகும் பிகில் படப்பிடிப்பு சம்பவம் !!

By Kanmani PFirst Published Nov 18, 2021, 2:51 PM IST
Highlights

விஜயின் பிகில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர்கள் புகைப்படம் என்றாலே வைரலாவது வழக்கம் தானே. அந்த வகையில் சமீபத்தில் தல அஜித்தின் பைக் சுற்றுலா பயணம் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வந்தது. தற்போது தளபதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. போட்டி போட்டுக்கொண்டு இருவரது ரசிகர்களும் சமூக வலைதளத்தில் ஒரு வரை ஒருவர் மிஞ்சி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் வெளியான பிகில். மாஸ் வெற்றி பெற்றிருந்தது. விஜய்க்கு  ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த இந்த படம் கடந்த 2019-ல் வெளியாகியிருந்தது.  தெறி, மெர்சல் படங்களை அடுத்து அட்லி -விஜய் கூட்டணியில் வெளியானது பிகில். இந்தப் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதிர், யோகிபாபு, விவேக், ஜாக்கி ஷெராப், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் சிறப்பா வரவேற்பையும் வசூலையும் வாரிக் குவித்தது. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும பீஸ்ட் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. பின்னர் சென்னையில் வணிக வளாக அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள்.

இந்நிலையில் பிகில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விஜயின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனால் விரல் வெட்டப்படும் வில்லன் நடிகர் விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் அது.

click me!