’என் ஓட்டை யாருக்குப் போடுவேன்’...’சூப்பர் டீலக்ஸ்’ சமந்தா ஓபன் டாக்...

By Muthurama LingamFirst Published Apr 11, 2019, 2:50 PM IST
Highlights

இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எதற்கும் பிரச்சாரத்தில் ஈடுபடாத நிலையில் தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ‘சூப்பர் டீலக்ஸ்’ நடிகையான சமந்தா.

இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எதற்கும் பிரச்சாரத்தில் ஈடுபடாத நிலையில் தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ‘சூப்பர் டீலக்ஸ்’ நடிகையான சமந்தா.

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம், சிக்கிம் மாநில சட்டப் பேரவைகளுக்கும், ஒடிஸா சட்டப் பேரவையிலுள்ள சில தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

ஆந்திரத்தில் தேர்தல் நடைபெறும் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதேபோல், மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் தனித்தனியாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிக்கப்பட்டன. அதையடுத்து நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.தெலுங்கு தேசம் கட்சியின் 37 ஆண்டுகால வரலாற்றில், தேர்தலை அக்கட்சி தனித்து எதிர்கொள்வதும் இதுதான் முதல்முறையாகும்.

இந்நிலையில், ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெபல்லே சட்டமன்ற தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவும் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளருமான அனகனி சத்யா பிரசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல நடிகை சமந்தா. இதுகுறித்து விடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் அனகனி சத்யா பிரசாத் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று ரெபல்லே சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த ஒரு கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்த சமந்தா ,’ஆமாம். அனகனி சத்யா பிரசாத்துக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளேன். அவர் என்னுடைய குடும்ப நண்பர். நான் ஹைதராபாத்துக்குக் குடியேறியது முதல் அவரையும் அவருடைய சகோதரி டாக்டர் மஞ்சுளா அனகனியையும் நான் அறிவேன். அவர் நல்ல மனிதர் என்பதால் என் ஆதரவைத் தெரிவித்துள்ளேன்’ என்று தன் நிலைப்பாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் சமந்தா. அவருடைய பிரதியுஷா அறக்கட்டளையின் இணை நிறுவனர், மஞ்சுளா அனகனி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

click me!