கர்ப்பமாக இருக்கும் சின்னத்திரை நடிகை நிஷா! உச்சகட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராம் வெளியிட்ட சீமந்த புகைப்படங்கள்!

By manimegalai aFirst Published Apr 11, 2019, 2:12 PM IST
Highlights

சின்னத்திரை நடிகை நிஷா - நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நட்சத்திர ஜோடிகளுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக, அவரின் கணவர்  சீமந்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
 

சின்னத்திரை நடிகை நிஷா - நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நட்சத்திர ஜோடிகளுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக, அவரின் கணவர் சீமந்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் பிரபல சீரியல் நடிகை நிஷா. இதை தொடர்ந்து 'முத்தாரம்', 'ஆபிஸ்', 'தெய்வமகள்', 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற பல சீரியல்களை நடித்துள்ளார்.

மேலும், வெள்ளித்திரையில் 'இவன் வேற மாதிரி' , 'நான் சிகப்பு மனிதன்' , 'என்ன சத்தம் இந்த நேரம்' , 'வில் அம்பு' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் பிரபல மாடலும், நடிகருமான கணேஷ் வெங்கட்ராமை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கணேஷ் திறமையான நடிகராக அனைவராலும் அறியப்பட்டாலும் இன்னும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், திருமணம் ஆகி மூன்று வருடத்திற்கு மேல் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் காதல் ஜோடிகள் போல் ஜாலியாக சுற்றி வந்த இந்த தம்பதிகளுக்கு, தற்போது குழந்தை பிறக்க உள்ளதை, நடிகர் கணேஷ் வெங்கட்ராம் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் நிஷாவின் சீமந்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து,  தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கணேஷ் வெங்கட்ராமுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!