’அரசியல் லாபத்திற்காக என் பெயரைப் பயன்படுத்தவேண்டாம்’...பா.ம.க. மீது பாயும் இளையராஜா...

Published : Apr 11, 2019, 12:23 PM IST
’அரசியல் லாபத்திற்காக என் பெயரைப் பயன்படுத்தவேண்டாம்’...பா.ம.க. மீது பாயும் இளையராஜா...

சுருக்கம்

தேர்தல் பிரச்சாரங்களில் தனது பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வதை அரசியல் கட்சிகள் உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று இசைஞானி இளையராஜா தரப்பில்  அவசர வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.  

தேர்தல் பிரச்சாரங்களில் தனது பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வதை அரசியல் கட்சிகள் உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று இசைஞானி இளையராஜா தரப்பில்  அவசர வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜ.க  தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பாமக தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் 7 தமிழர்கள் விடுதலை, கட்சத்தீவு மீட்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், பெண்கள் பாதுகாப்பு, திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல், பெண் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம், சுயமரியாதை திருமணம் என 37 தலைப்புகளில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

அந்த தேர்தல் அறிக்கையின் 28 வது இடத்தில் இடம்பெற்றுள்ள அந்த வாக்குறுதியில்[ 28.] மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதையொட்டி தனது பிரச்சாரங்களில் பா.ம.க இளையராஜாவின் புகைப்படங்களை தங்களது பிரச்சாரங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது ராஜாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அதையொட்டி தனது ’இளையராஜா மியூசிக் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட்டெட்’ நிர்வாகி பி.ஸ்ரீராம் என்பவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...சில அரசியல் கட்சிகள் இந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகளைப் பெற "மேஸ்ட்ரோ இளையராஜாவின்" புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். எந்த‌ அரசியல் க‌ட்சிக‌ளும் அவரது பெயரையோ அல்லது அவ‌ர‌து புகைப்படத்தையோ அர‌சிய‌ல் லாப‌த்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்று  கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!