Samantha : சர்ச்சைக்குரிய வேடத்தில் தில்லாக நடித்த சமந்தாவிற்கு சிறந்த நடிகை விருது... குவியும் வாழ்த்துக்கள்

Ganesh A   | Asianet News
Published : Dec 10, 2021, 06:44 PM IST
Samantha : சர்ச்சைக்குரிய வேடத்தில் தில்லாக நடித்த சமந்தாவிற்கு சிறந்த நடிகை விருது... குவியும் வாழ்த்துக்கள்

சுருக்கம்

ஓடிடியில் வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.

இயக்குனர் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி இருந்த 'தி ஃபேமிலி மேன்' இணையதள தொடரின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இதன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது. இதில் நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அமேசான் ஓடிடியில் தளத்தில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியான 'தி ஃபேமிலிமேன் 2 ' வெப் தொடரில் தமிழ் ஈழ மக்களை இழிவுபடுத்து வகையான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, தமிழக அரசியல்வாதிகள் பலர், தொடர்ந்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல் இந்த தொடரை தடை செய்யவேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இப்படி ஒரு பக்கம் கடுமையாக எதிர்ப்புகளுடன்  'தி ஃபேமிலிமேன் 2 ' வெப் தொடர் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் சில எதிர்மறையான கருத்துக்களை பெற்றாலும், மறுபுறம் திரை உலக பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களிடம் இருந்து சமந்தாவின் நடிப்புக்கு மட்டும் இன்றி, ஒட்டு மொத்த குழுவின் உழைப்பு, மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பும் வெகுவாக பாராட்டபட்டது.  

அண்மையில் மெல்போர்னில் நடந்த விழாவில் சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது 'தி ஃபேமிலிமேன் 2 ' வெப் தொடரில் நடித்ததற்காக அவருக்கு மேலும் ஒரு விருது கிடைத்துள்ளது. 

ஓடிடியில் வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது. இதனால் உற்சாகமடைந்த சமந்தா, இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த 'தி ஃபேமிலிமேன் 2 ' வெப் தொடர் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். விருதுடன் போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்
ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது