தற்போது மீண்டும் வெப் சீரிஸ் ஒன்றால் சமந்தா பெயரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பிறகு முன்னணி நடிகைகளுக்கு மார்க்கெட் காலியாகிவிடும், ஆனால் சமந்தா விஷயத்திலோ கல்யாணத்திற்கு பிறகு தான் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனியை நீக்கியது சந்தேகங்களை கிளப்பியது. இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக கூட வதந்திகள் பரவின. ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை போல் கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்தார்.
அடுத்ததாக தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்தது கடும் கண்டனங்களை உருவாக்கியது. இதில் இலங்கை பெண்ணாக நடித்த சமந்தாவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. நீண்ட நாளாக இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வந்த சமந்தா, ஃபேமிலி மேன் 2 படத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கேட்டார்.
தற்போது மீண்டும் வெப் சீரிஸ் ஒன்றால் சமந்தா பெயரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொரியன் வெப் சீரிஸ் ஒன்று தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகி வருகிறது. இதில் சமந்தா ஆடையில்லாமல் நிர்வாணமாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நிமிட காட்சிகளில் சமந்தா ஆடையின்றி நடிக்க உள்ளதாக கூறப்படுவது, அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.