
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், பல பிரபலங்கள் காமெடி நடிகர்கள் சின்னத்திரை பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்கள் என பலர் போட்டி போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள். இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மட்டும் இன்றி பிரபலங்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் 1,2,3,4 என அடுத்தடுத்து சீசன்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட்டி, தொட்டி வரை பிரபலம் மட்டுமல்லாது பட வாய்ப்புகளும் குவியும் என்பதால் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். தமிழைப் போலவே மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதாகவே தொடங்கியது. அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் 14 நாட்கள் பிரபல ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த முறை பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் கட்டாயம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் பிக்பாஸ் புரோமோ சூட் துவங்கி விட்டதாக ஒரு புகைப்படமும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதை தொடர்ந்து, பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இதில் முக்கியமான 2 போட்டியாளர்கள் குறித்த தகவலும் கசிந்துள்ளது. தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் நடிகையாகவும் திகழும் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் பிக் பாஸ் சீசன் 5 வில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவங்க இரண்டு பேரும் வனிதா அக்காவையே கதறவிட்டவங்க ஆச்சே என நெட்டிசன்கள் மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.