படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய ஆர்யா இயக்குனர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

Published : Aug 28, 2021, 07:02 PM IST
படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய ஆர்யா இயக்குனர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

சுருக்கம்

 சார்பட்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா தற்போது மீண்டும் யார் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் அடுத்த படத்தை தயாரித்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'மகாமுனி' படத்துக்குப் பின், வலுவான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நிலையில், இயக்குனர் பா ரஞ்சித் கூறிய 'சார்பட்டா' படத்தின் கதை ஆர்யாவை மிகவும் கவர்ந்தது. எனவே இந்த படத்திற்காக, பலகட்ட ரிஸ்க் எடுத்து தன் உடலை ஏற்றி இறக்கி கடின உழைப்பை செலுத்தி இப்படத்தை நடித்து முடித்தார்.

ஆர்யா பட்ட கஷ்டத்திற்கு கைமேல் பலன் கொடுக்கும் விதமாக இத்திரைப்படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியானதை விட திரையரங்கில் 'சார்பட்டா பரம்பரை' வெளியாகி இருந்தால், இப்படத்திற்கான ரீச் மற்றும் வசூல் வேறு லெவல் இருந்திருக்கும் என சொல்லாத ரசிகர்களே இல்லை. சார்பட்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா தற்போது மீண்டும் யார் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் அடுத்த படத்தை தயாரித்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுவரை ஒரே மாதிரி கதைகளை இயக்காமல் வேறு வேறு கதை அம்சம் கொண்ட வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். இவர் இயக்கிய 'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்', 'டிக் டிக் டிக்' ஆகிய படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றிப் படங்களாகவே அமைந்தது. அதேபோல் இவரது கதையும் அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் இருந்தது. 

இவர் தற்போது ஆர்யாவை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார். இந்த கதை ஆர்யாவிற்கு மிகவும் பிடித்துப்போகவே, இந்த படத்தில் நடிப்பது மட்டும் அல்லாமல்...  இப்படத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம் ஆர்யா.  சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'டெடி' படத்தில் கூட ஆர்யா மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகிய இருவருமே இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
கதிர் - ஞானம் இடையே சண்டையை மூட்டிவிட்ட அறிவுக்கரசி.. பிரியும் ஆதி குணசேகரன் ஃபேமிலி - எதிர்நீச்சல் தொடர்கிறது