ராம் சரண் படத்தில் அடுத்தடுத்து இணைந்த இரண்டு மலையாள நடிகர்கள்! வேற லெவலுக்கு கதையை செதுக்கும் ஷங்கர்!

Published : Aug 28, 2021, 05:45 PM IST
ராம் சரண் படத்தில் அடுத்தடுத்து இணைந்த இரண்டு மலையாள நடிகர்கள்! வேற லெவலுக்கு கதையை செதுக்கும் ஷங்கர்!

சுருக்கம்

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படத்தில் ஏற்கனவே நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாகவும் மற்றொரு நாயகியாக அஞ்சலியும் கமிட் ஆகியுள்ள நிலையில், தற்போது அடுத்தடுத்து இவரது படத்தில் இரண்டு, மலையாள நடிகர்கள் கமிட் ஆகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படத்தில் ஏற்கனவே நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாகவும் மற்றொரு நாயகியாக அஞ்சலியும் கமிட் ஆகியுள்ள நிலையில், தற்போது அடுத்தடுத்து இவரது படத்தில் இரண்டு, மலையாள நடிகர்கள் கமிட் ஆகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வந்த 'இந்தியன் 2 ' திரைப்படம், இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இம்முறை தமிழ் பட ஹீரோக்களை வைத்து படம் இயக்காமல், தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து பிரமாண்டமாக உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார். 

ராம் சரண் ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வந்த RRR படம், சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ராம் சரணுக்காக கதையை செதுக்கி வரும் ஷங்கர், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுயும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் இரண்டு, முன்னணி நடிகர்கள்... கமிட் ஆகியுள்ளனர். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில்... ஃபகத் பாசில், மற்றும் ஜெயராம் ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்
விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்