உலக புகழ்பெற்ற பிரபலத்தின் சொகுசு கார் திருட்டு! கார் கிடைத்தாலும் காத்திருந்த அதிர்ச்சி..!

Published : Aug 28, 2021, 03:42 PM IST
உலக புகழ்பெற்ற பிரபலத்தின் சொகுசு கார் திருட்டு! கார் கிடைத்தாலும் காத்திருந்த அதிர்ச்சி..!

சுருக்கம்

உலகப் புகழ்பெற்ற ஆக்சன் ஹீரோ டாம் க்ரூஸின் கார் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

உலகப் புகழ்பெற்ற ஆக்சன் ஹீரோ டாம் க்ரூஸின் கார் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மிஷன் இம்பாசிபிள்' சீரிஸ் திரைப்படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற ஆக்ஷன் ஹீரோவாக இருப்பவர் டாம் க்ரூஸ். சிறியவர்கள் முதல் ,பெரியவர்கள் வரை தன்னுடைய அதிரடி ஆக்சன் காட்சியால் கட்டிப்போட்டவர். திரையரங்கில் சவுண்ட் எபக்ட்டுடன் இவரது அதிரடி காட்சிகளை, கண்டு ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் படப்பிடிப்பிற்கு தன்னுடைய சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது திடீர் என இவருடைய கார் திருடப்பட்ட சம்பவம் ஹாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாம் க்ரூஸின் விலை உயர்ந்த BMW X 7 ரக கார் தான் திருடப்பட்டுள்ளது.  இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு கருவி மூலம், திருடப்பட்ட காரை மீட்டு டாம் க்ரூசிடம் ஒப்படைத்தனர். அதே நேரத்தில், கார் கிடைத்தாலும் காரில் இருந்த அவரது உடமைகள் அனைத்தும் திருட்டு போயுள்ளது.   இதன் மதிப்பு மட்டும் சுமார் ஆயிரம் பவுண்ட் இருக்கும் என கூறப்படுகிறது.

டாம் க்ரூஸின் கார் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்
விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்