24 மணிநேரத்திற்குள் 'குட்டப்பன்' டீசர் படைத்த சாதனை..! கொண்டாட்டத்தில் படக்குழு..!

Published : Aug 28, 2021, 01:37 PM IST
24 மணிநேரத்திற்குள் 'குட்டப்பன்' டீசர் படைத்த சாதனை..! கொண்டாட்டத்தில் படக்குழு..!

சுருக்கம்

பிக் பாஸ் லாஸ்யா, மற்றும் தர்ஷன் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கூகுள் குட்டப்பன்' படத்தின் டீசர் நேற்று மாலை வெளியான நிலையில், 24 மணிநேரத்திற்குள் ஒரு மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.  

பிக் பாஸ் லாஸ்யா, மற்றும் தர்ஷன் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கூகுள் குட்டப்பன்' படத்தின் டீசர் நேற்று மாலை வெளியான நிலையில், 24 மணிநேரத்திற்குள் ஒரு மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.

சமீபகாலமாக மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'ஆண்ட்ராய்டு குச்சுப்பன்' என்கிற மலையாளப் படத்தின் ரீமேக்காக தற்போது 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி 'பிரெண்ட்ஷிப்' படத்தில் நடிகையாக அறிமுகமான, லாஸ்யா நாயகியாக நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்று, கடைசிநேரத்தில் வெளியேறிய தர்ஷன் நடித்துள்ளார்.  மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ளது மட்டும் இல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனர்களாக இருந்த  சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

 தன்னுடைய தந்தை தனியாக இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவருக்கு ஒரு ரோபோ அனுப்புகிறார். அந்த ரோபோவுடன் சுமார் நான்கு மாதங்கள் நட்பாக பழகி அதனை தன் குடும்பத்தில் ஒருவராக நினைக்க துவங்கும் தந்தையிடமிருந்து, திரும்ப அந்த ரோபோவை எடுத்துச் செல்லும் போது நடக்கும் பிரச்சினைகளை எப்படி கதாநாயகன் சமாளிக்கிறார் என விருவிருப்பான கதையோட்டத்துடன் இப்படம் அமைந்துள்ளது. காமெடி, சென்டிமென்ட் , காதல், என அனைத்துக்கும் பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே, 1 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு, படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
Shivani Narayanan : எல்லாமே அப்படியே தெரியுது! சேலையில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன் கிளிக்ஸ்