
சர்வதேச இசை இதழ்களில் ஒன்றான ரோலிங் ஸ்டோன், இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'எஞ்சாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் மற்றும் 'நீயே ஒளி' பாடலின் சாதனையை பாராட்டும் விதமாக, பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலை தீ-க்கு இணையாக பாடி புகழ்பெற்ற பாடகருமான, தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெற வில்லை. அவரது புகைப்படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை என பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலின் ஒவ்வொரு சாதனையின் போதும், தீ-யை மட்டுமே முன்னிறுத்துவதாகவும், தெருக்குரல் அறிவின் திறமைகள் மறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அவரது அடையாளம் மறைக்கப்படுவதாக கூறி இருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.
இதை தொடர்ந்து பலர் தெருக்குரல் அறிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரோலிங் ஸ்டோன் ஆகஸ்ட் மாத இணை இதழில்... தெருக்குரல் அறிவின் புகைப்படத்தையும், அவரது சாதனைகள் குறித்தும் குறிப்பிட்டு ஆர்ட்டிகள் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரோலிங் ஸ்டோன் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதனை தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் ரோலிங் ஸ்டோன் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து பலரும் இதற்க்கு தங்களுடைய ஆதரவையும், தெருக்குரல் அறிவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து பாடியுள்ள, என்ஜாய் எஞ்சாமி பாடல் இதுவரை, யூ டியூப்பில் 320 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல குழந்தைகளுக்கும் ஃபேவரட் பாடலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.