வனிதாவுடன் இணைந்த பவர் ஸ்டாரின் அடுத்த அவதாரம்... ‘பிக்கப்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 27, 2021, 11:40 PM IST
வனிதாவுடன் இணைந்த பவர் ஸ்டாரின் அடுத்த அவதாரம்... ‘பிக்கப்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சுருக்கம்

ஹீரோ, குணசித்திர நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமையுடன் வலம் வரும் பவர் ஸ்டார் தற்போது இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். 

ஹீரோ, குணசித்திர நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமையுடன் வலம் வரும் பவர் ஸ்டார் தற்போது இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும்  பிக்கப் ட்ராப் படத்தில் பர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், 'ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி  காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப்பட்டாளமே களமிறங்கியுள்ளது. 

இந்த படத்தின் புரோமோஷனுக்காக கடந்த மாதம் வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது. மாலையும், கழுத்துமாக பவர் ஸ்டாருடன் வனிதா இருக்கும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்ன 4வது கல்யாணமா? என நக்கலடித்தனர். இதனால் கடுப்பான வனிதா விஜயகுமார் இந்த படத்தின் பிரஸ் மீட்டில் பலரும் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்ததால் கடுப்பான வனிதா, சக நடிகர், நடிகைகள் திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்டால், அது வேலை விஷயமாக இருக்க கூடாதா? , நான் நான்கு திருமணம் அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என காரசரமாக பதிலளித்தார். 

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. கதையின் படி பவர் ஸ்டாரை மூன்றாவதாக மண முடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா. அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து சொல்வது தான் படமாம். இந்த படம் பவர் ஸ்டாருக்கு 100வது படமாம். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி. இயக்குவதுடன் ட்யூன் போட்டு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறாராம் பவர் ஸ்டார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்