க்ரீன் சிக்னல் கிடைச்சதுமே இப்படியா?... வடிவேலு அடுத்தடுத்து எத்தனை படங்களில் நடிக்க போகிறார் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Aug 28, 2021, 7:46 PM IST
Highlights

ரெட் கார்டு நீங்கிய கையோடு வடிவேல் அடுத்தடுத்து எத்தனை படங்களில் கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


கடந்த 2006 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் "இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி". இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கிய இப்படம் ரசிகர்களில் தாறுமாறாக ஹிட் அடித்தது. காமெடியில் கலக்கிய வடிவேலுவை கதாநாயகனாக களமிறக்கி கல்லா கட்டினார்கள். பாக்ஸ் ஆபிஸிலும் முன்னணி நாயகர்களுக்கு இணையான வசூலை அள்ளியது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக மட்டுமே படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டினார் வடிவேலு. அந்த வகையில் நடித்த எலி, இந்திரா லோகத்தில் நான் அழகப்பன் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தது. எனவே மீண்டும் சில படங்களில் காமெடி ரோலில் நடிக்க துவங்கிய இவரை வைத்து '23 ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முன்வந்த இயக்குனர் சிம்பு தேவன். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். மிக பிரமாண்ட செட் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த போதும், படப்பிடிப்புக்கு வடிவேலு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, இதுவே மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து... இயக்குனர் ஷங்கர் வடிவேலுவால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். எனவே வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டதால் இவரை வைத்து படம் இயக்க தயாரான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூட பின்வாங்கினர். பல வருடங்களாக இழுபறியாக இருந்த '24 ஆம் புலிகேசி' படத்தின் பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

நீண்ட இடைவெளிப் பிறகு மீண்டும் திரைக்கு வருவதால் இது எனக்கு மறுபிறப்பு என வடிவேல் உருகி இருந்தார். இந்நிலையில் ரெட் கார்டு நீங்கிய கையோடு வடிவேல் அடுத்தடுத்து எத்தனை படங்களில் கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். முதலில் சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில் நடிக்கப்போகிறார் என்பது கூடுதல் தகவல்.

click me!