விஜய்சேதுபதி ‘துக்ளக் தர்பார்’ படம் குறித்த லேட்டஸ் அப்டேட் இதோ!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 28, 2021, 10:54 PM IST
Highlights

சற்று நேரத்திற்கு முன்னதாக விஜய் சேதுபதி, பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது தொடர்ந்து நெட்ஃபிலிக்ஸிலும் வெளியாகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் அரசியல் த்ரில்லரான தயாராகியுள்ள துக்ளக் தர்பார்  படத்தை அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய கோவிந்த் வசந்தா இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். அதேபோல் நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பார்த்திபன் - விஜய்சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது. 


கடந்த ஆண்டு ஜூலை மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் டீசர் வெளியிடப்பட்டது. அதில் சீமானை சீண்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால் அப்படியெல்லாம் யாரையும் சீண்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை என படக்குழு விளக்கமளித்திருந்தது. கொரோனா காரணமாக இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. 

உலக அளவில் எங்குமே வெளிவராத புத்தம் புதிய திரைப்படம்!

நமது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கலக்கலான திரைப்படம்

துக்ளக் தர்பார்
செப்டம்பர் 10, 6.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்! pic.twitter.com/N3WpORwCvn

— Sun TV (@SunTV)

ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் நல்ல விலை கொடுக்க முன்வந்ததைத் தொடர்ந்து, 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகியனது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், தற்போது துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது. துக்ளக் தர்பார் படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்னதாக விஜய் சேதுபதி, பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது தொடர்ந்து நெட்ஃபிலிக்ஸிலும் வெளியாகிறது.

click me!