பிரமாண்டமாக நடந்த சமந்தா - நாகசைதன்யா  நிச்சயதார்த்த விழா ...!!!

 
Published : Jan 29, 2017, 01:31 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
பிரமாண்டமாக நடந்த சமந்தா - நாகசைதன்யா  நிச்சயதார்த்த விழா ...!!!

சுருக்கம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா, இவரும்  நாகர்ஜூனாவின் முதல் மனைவி மகன் நாகசைதன்யாவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர்.

இவர்கள் காதல் கதை வெளிவந்ததும், தங்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் வெகு விமர்சியாக நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் இருவீட்டாருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது, மேலும் இவர்களுடைய திருமணம் டிசம்பர் மாதம்  நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சமந்தா விஜய், சிவகார்த்திகேயன், விஷால் மற்றும் பகத்பசில் ஆகியோருடன் கமிட் ஆகியுள்ள படங்களை டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விட்டு திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், திருமணத்திற்கு பின் இவர் நடிப்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

ரசிகர்களுக்காக சமந்தா நடிப்பாரா இல்லையா என பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!
அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!