முரட்டுத் தனமாக நடந்து கொண்ட மலர் டீச்சர்......அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
Published : Feb 06, 2018, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
முரட்டுத் தனமாக நடந்து கொண்ட மலர் டீச்சர்......அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

saipallavi horrer movie

பிரேமம்

2015ம் ஆண்டு  மலையாளத்தில் வெளிவந்த படம் பிரேமம். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.இதில் நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அனுப்பமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

மலர் டீச்சர் சாய் பல்லவி

ஆனால் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தவர் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய்பல்லவிதான். இது இவரின் முதல் படம். ஆனால் முதல் படம் போல் அல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சாய் பல்லவி. மேலும் மேக்கப் இல்லாமல் அழகாக தோன்றுவதால் மலையாள சேட்டன்களும், தமிழ்நாட்டு ஆண்களும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.இந்த படத்தின் மூலமாக சாய் பல்லவிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. 

கரு

சாய்பல்லவி தற்போது தமிழில் ஏ.எல். விஜய் இயக்கும் கரு படத்தில் நடித்து வருகிறார்.மேலும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும், தனுஷ் நடிக்கும் மாரி2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நாக சவுரியா

இந்த நிலையில் கரு படத்தில் சாய் பல்லவியுடன் நடித்த நாக சவுரியா அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் தற்போது சாய் பல்லவியை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. படப்பிடிப்பில் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுவார்.

சகிக்கவில்லை

மேலும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். நடந்து கொண்டதை பார்க்க சகிக்கவில்லை. தெலுங்கு படமான ஃபிடா படம் ஹிட்டாகி இருந்தாலும் அதற்கு சாய்பல்லவி காரணமல்ல என்று சாடியுள்ளார்.

அதிர்ச்சி

இதற்கு முன்பே நானியுடன், சாய் பல்லவி நடித்த ”மிடில் கிளாஸ் அப்பாயி” படத்தில் இதே போல பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.படப்பிடிப்பில் நானிக்கும் சாய் பல்லவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருமே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிய சம்பவமும் நடந்தது.இந்நிலையில் நாக சவுரியா கூறியுள்ள குற்றச்சாட்டு தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமின்றி சாய் பல்லவி ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!