சாட்டை பட ஹீரோ அஜ்மல் கானுக்கு டும் டும் டும் - நேரில் வந்து வாழ்த்திய அரசியல் மற்றும் திரைப்பிரபலன்கள்!

Ansgar R |  
Published : Feb 15, 2024, 04:56 PM IST
சாட்டை பட ஹீரோ அஜ்மல் கானுக்கு டும் டும் டும் - நேரில் வந்து வாழ்த்திய அரசியல் மற்றும் திரைப்பிரபலன்கள்!

சுருக்கம்

Actor Yuvan Marriage : இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில், பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பில், உருவான "சாட்டை" திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தான் யுவன் என்கின்ற அஜ்மல் கான். இப்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழில் "பாசக்கார நண்பர்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் யுவன், தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் இயக்குனர் பெரோஸ் கான் அவர்களுடைய மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. "சாட்டை" படத்தை தொடர்ந்து தமிழில் "காதலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை", "இளமி" மற்றும் அய்யனார் வீதி உள்ளிட்ட திரைப்படங்களில் யுவன் நடித்துள்ளார். 

நடிகர் யுவன் இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அன்பழகன் அவர்களின் "அடுத்த சாட்டை" திரைப்படத்தில் நடித்ததோடு தனது திரையுலக பயணத்திற்கு ஓய்வு கொடுத்து விட்டு தற்பொழுது தனியே உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் யுவன் அவர்களுக்கும் கும்பகோணம் தங்கவிலாஸ் நிறுவனத்தின் தலைவரான சித்திக் அலி அவர்களுடைய மகள் ரமீஸா கஹானி அவர்களுக்கும் திருமணம் நடந்துள்ளது. 

"அவர் அப்போவே அப்படி".. பட வசூலில் மாஸ் காட்டிய "புரட்சி தலைவர்" - கலெக்ஷனில் கலக்கிய MGRன் டாப் 8 படங்கள்!

இந்த திருமண விழாவில் பிரபல அரசியல் தலைவர் ஜி.கே வாசன், நடிகரும் அரசியல் தலைவருமான சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல நடிகர்கள் மன்சூர் அலிகான், ரியாஸ் கான், உமா ரியாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். 

திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய கையேடு தனக்கென்று தனியே ஒரு உணவகத்தை துவங்கி நடத்தி வருகின்றார் அஜ்மல் கான். இவருடைய தந்தை இப்பொது மிக பெரிய தொழில் அதிபராக திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கந்துவட்டி கொடுமை!! துணை நடிகரின் மனைவி - மகனை கடத்தி சென்று.. 2 மாதம் தனி அறையில் அடைத்த கும்பலால் பரபரப்பு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!