MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "அவர் அப்போவே அப்படி".. பட வசூலில் மாஸ் காட்டிய "புரட்சி தலைவர்" - கலெக்ஷனில் கலக்கிய MGRன் டாப் 8 படங்கள்!

"அவர் அப்போவே அப்படி".. பட வசூலில் மாஸ் காட்டிய "புரட்சி தலைவர்" - கலெக்ஷனில் கலக்கிய MGRன் டாப் 8 படங்கள்!

MGR Top 8 Box Office Hit Movies : தமிழக திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் உலகிலும் சரி ஒப்பற்ற சாதனையாளராக திகழ்ந்த ஓர் மாமனிதர் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

2 Min read
Author : Ansgar R
Published : Feb 15 2024, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
MGR Movies

MGR Movies

இன்றைய காலகட்டங்களில் ஒரு படம் 100 கோடி என்ற அளவை தொட்டால் தான் அது ஹிட் படம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு 500, 1000 என்று கொடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். ஆனால் 1960 மற்றும் 1970களில் ஒரு படம் லட்சம் ரூபாயை வசூல் செய்தாலே அது மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் தான், அந்த வகையில் எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களை வசூல் சாதனை செய்துள்ளது. 

முதல் முதலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் "எங்கள் வீட்டு பிள்ளை" திரைப்படம் தான். 1965 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் சுமார் 13.23 லட்சங்களை வசூல் செய்துள்ளது.

கந்துவட்டி கொடுமை!! துணை நடிகரின் மனைவி - மகனை கடத்தி சென்று.. 2 மாதம் தனி அறையில் அடைத்த கும்பலால் பரபரப்பு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
MGR Movies Collection

MGR Movies Collection

அதைத்தொடர்ந்து கடந்த 1969 ஆம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் அசத்திய திரைப்படம் தான் "அடிமைப்பெண்". இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் சுமார் 13.6 லட்சங்களை வசூல் செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒரு திரைப்படத்தை தமிழில் மாட்டுக்கார வேலனாக என்ற பெயரில் எடுத்தனர். அந்த திரைப்படம் சென்னையில் மட்டும் 13.21 லட்சங்களை வசூல் செய்தது.

கடந்த 1979 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான "ரிச்சாக்காரன்" என்கின்ற திரைப்படம் சென்னையில் சுமார் 16.84 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. அவருடைய திரை வரலாற்றில் 15 லட்சங்களை தாண்டி வசூல் செய்த முதல் திரைப்படம் இதுதான்.

33
Puratchi Thalaivar

Puratchi Thalaivar

கடந்த 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம் சென்னையில் மட்டும் சுமார் 23.40 லட்சம் ரூபாயை வசூல் செய்தது. இந்த திரைப்படம் அவருடைய வாழ்நாளில் மிகப்பெரிய வசூல் பெற்ற திரைப்படமாகவும் இன்றளவும் திகழ்கின்றது. 

1975 ஆம் ஆண்டு வெளியான "இதயக்கனி" திரைப்படம் சென்னையில் மட்டும் சுமார் 19.89 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. அதேபோல 1977 ஆம் ஆண்டு வெளியான "மீனவ நண்பன்" என்ற திரைப்படம் 17. 70 லட்சம் ரூபாய் சென்னை மட்டும் மற்றும் வசூல் செய்தது. 

1977 ஆம் ஆண்டு வெளியான "இன்று போல என்றும் வாழ்க" என்ற திரைப்படம் சென்னையில் மட்டும் 15.68 லட்சங்களை வசூல் செய்தது. அதேபோல 1977 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் தவிர எந்த ஒரு நடிகருடைய திரைப்படமும் சென்னையில் 13 லட்சங்களை கடந்து வசூலித்ததில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை மக்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்... புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் மூடப்படுகிறது - பின்னணி என்ன?

About the Author

AR
Ansgar R
எம்.ஜி.ஆர்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved