
நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமாஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் பட வருமான விவகாரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய்க்கு சொந்தமான சாலிகிராமம், நீலாங்கரை, பனையூர் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. 16 மணி நேரத்திற்கும் மேலாக விஜய் வீடுகளில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது விஜய் மற்றும் அவரது சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் உள்ள அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட சோதனையில் தியாகராய நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் 50 கோடி ரூபாயும், மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் 15 கோடி ரூபாயும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த தொகை 77 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் மற்றும் காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.