"பிகில்" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் இவ்வளவா?.... ஐ.டி.ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 06, 2020, 04:09 PM IST
"பிகில்" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் இவ்வளவா?.... ஐ.டி.ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

சுருக்கம்

16 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வரும் நிலையில் விஜய் மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமாஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் பட வருமான விவகாரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

நடிகர் விஜய்க்கு சொந்தமான சாலிகிராமம், நீலாங்கரை, பனையூர் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று இரவு முதல் நடிகர் விஜய்யிடம் ஐ.டி. அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருந்தார்.

அந்த தகவலை அடிப்படையாக வைத்தே வருமான வரித்துறையினர் ஏஜிஎஸ் சினிமாஸ், பிகில் பட பைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரை சுற்றிவளைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் பிகில் படத்தில் நடித்ததற்கு  நடிகர் விஜய் ரூ.30 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் வைத்து அவரிடமும், அவரது மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 16 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வரும் நிலையில் விஜய் மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!