
ஓமிக்ரான் என்னும் கொரோனா பிறழ்வு அதி வேகமாக பரவியதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கும் சூழல் ஏற்பட்டது. இதன்காரணமாக இனி ரிலீஸ் செய்யப்படும் படங்களின் வசூல் வெகுவாக குறையக்கூடும் என தெரிகிறது. இதன் காரணமாக ஜனவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆர் ஆர் ஆர் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி rrr படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிட தயாராகி வருகிறது. வரும் ஜனவரி 7-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே படத்தின் இரு சிங்கிள், ட்ரைலர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக இந்த பட ரிலீஸை ஒத்தி வைத்ததாக அறிவிதித்தது படக்குழு.
முன்னதாக ஒரு வேலை கொரோனா கட்டுக்குள் வந்து அனைத்து திரையரங்குகளும் முழுமையாக செயல்படும் பட்சத்தில் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28-ல் படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு புதிய தகவலை அளித்தது.. இந்நிலையில் மீண்டும் எகிறிய கொரோனா தொற்று சமீபகாலமாக குறைந்து வருவதன் காரணமாக பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு முழு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது..இதன் காரணமாக ஆர் ஆர் ஆர் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளார் இயக்குனர்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.