RRR Movie Promotion : சல்மான் கான் என்ட்ரி கொடுக்கும் ...பிரமாண்ட ஏற்பட்டில் அரங்கேறும் ப்ரோமோஷன்...

Kanmani P   | Asianet News
Published : Dec 19, 2021, 10:27 AM IST
RRR Movie Promotion : சல்மான் கான் என்ட்ரி கொடுக்கும் ...பிரமாண்ட ஏற்பட்டில் அரங்கேறும் ப்ரோமோஷன்...

சுருக்கம்

RRR Movie promotion : ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இதற்காக போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  

பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி rrr படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள  ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி  உருவாக்கப்பட்டு உள்ளது. 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படம் வரும் ஜனவரியில் திரையிட தயாராகி வருகிறது. வரும் ஜனவரி 7-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.இதற்கிடையே படத்தின் இரு சிங்கிள், ட்ரைலர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து தற்போது மும்பையில் இன்று ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் கலந்து கொள்வார் என எதிர்பாக்கப்படுகிறது.  இதற்காக போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்