உலக அளவில் மாஸ் காட்டும் தனுஷின் 'ரவுடி பேபி' பாடல்..! துள்ளி குதித்து கொண்டாடும் ரசிகர்கள்..!

By manimegalai a  |  First Published Jul 16, 2022, 10:36 PM IST

தனுஷ் - சாய்பல்லவி நடனமாடிய 'ரவுடி பேபி' பாடல்... உலக அளவில் யூ டியூபில், 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, 223வது இடத்தில் உள்ளது. இதனை தனுஷின் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.
 


இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் - சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "மாரி 2'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' குழந்தைகள் முதல் இளசுகள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு,  நடனப்புயல் பிரபு தேவா துள்ளலான நடனம் அசைவுகளை அமைத்து தனுஷ் - சாய் பல்லவி ஆகியோரின் திறமையை வேறு லெவலுக்கு வெளிப்படுத்தி காட்டினார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: 'சந்திரமுகி 2' துவக்கம்... வைரலாகும் ராகவா லாரன்ஸின் பதிவு!
 

அதே போல் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலை யூ-டியூப் மூலமாக இதுவரை 1  பில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்த முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையை ரவுடி பேபி படைத்துவிட்ட நிலையில் தற்போது உலக அளவில், இப்பாடல் மிகவும் பிரபலமடைந்துள்ளதை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

யூடியூபில், 1 பில்லியனுக்கும் அதிகமானவர்களால் 'ரவுடி பேபி' பாடல் பார்க்கப்பட்டு...  உலக அளவில் 223வது இடத்தில் உள்ள முதல் தென்னிந்திய பாடல் என்கிற பெருமையை பெற்றுள்ளது. இதனை தனுஷின் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள். ரவுடி பேபி பாடல் வெளியானது முதலே... பல்வேறு சாதனைகளை படைத்தது வரும் நிலையில், உலக அளவில் தற்போது மாஸ் காட்டியுள்ளது.

மேலும் செய்திகள்: கடற்கரையில் தாவணியை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா! ஹாட் போட்டோஸ்
 

YouTube celebrates the music videos that have over 1 BILLION views. Our all-time favourite 😍 from was listed at #223 in their playlist 💥

🔗 https://t.co/bTHjajSo4k pic.twitter.com/4O7TpdBMiT

— Divo (@divomovies)

 

click me!