90 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ரவுடி பேபி... பில்லியனை தொட்டுடும் போலயே...!

Published : Jul 20, 2020, 08:07 PM IST
90 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ரவுடி பேபி... பில்லியனை தொட்டுடும் போலயே...!

சுருக்கம்

பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய இந்த பாடலை இதுவரை யூ-டியூப்பில் 90 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். 

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. நடனப்புயல் பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது.  இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

 

இதையும் படிங்க: நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

அனிரூத் இசையில் "மாரி" படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்டான நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகம் அளவுக்கு 2ம் பாகத்தின் பாடல்கள் இருக்குமா? என ரசிகர்கள் புலம்பி வந்த சமயத்தில் "ரவுடி பேபி" என்ற ஒரே ஒரு பாடல் "மாரி 2" படத்திற்கான ஒட்டுமொத்த புரோமோஷனாக மாறியது. 

இதையும் படிங்க: பிரபல தொகுப்பாளினி டி.டி.யின் லாக்டவுன் டான்ஸ்... பிரபல மலையாள பாடலுக்கு வசீகரிக்கும் வைரல் வீடியோ.....

பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய இந்த பாடலை இதுவரை யூ-டியூப்பில் 90 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைகளை கொண்ட பாடல் என்னும் சாதனைய படைத்திருக்கிறது “ரவுடி பேபி”.இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வொண்டர் பார் ஃபிலிம்ஸ் நிறுவனம், அன்பும், ஆதரவும் கொடுத்த ரவுடி பேபிகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chaitra Reddy : கணவரை டைவர்ஸ் செய்தாரா கயல் சீரியல் நடிகை? 6 வருட திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டாரா சைத்ரா ரெட்டி?
Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?