
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்கப்படாதது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பிரபல தொகுப்பாளினி டி.டி.யின் லாக்டவுன் டான்ஸ்... பிரபல மலையாள பாடலுக்கு வசீகரிக்கும் வைரல் வீடியோ.....
அதுமட்டுமின்றி புதிய தேர்தலை நடத்தி முடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் என்பவரை நியமித்த நீதிமன்றம், 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலி மூலம் விசாரித்தது. அப்போது வாக்குப்பெட்டிகளை திறந்து வாக்கு எண்ணிக்கை நடத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.