
சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற, பாடலாக இதுவரை இருந்து வந்த 'ஆளப்போறன் தமிழன்' பாடலை தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளது 'மாரி 2 ' படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல்.
யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதிய 'ரௌடி பேபி' பாடல், தற்போது பலருக்கும் ஃபேவரட் பாடலாக மாறியுள்ளது. அந்த வகையில் யு டியூபில் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த 'மெர்சல்' படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' பாடலை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளது இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.
'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப் போறான் தமிழன்' பாடல் இதுவரை 9 கோடியே 13 லட்சம் பார்வையாளர்களை பெற்று, சமூக வலைத்தளத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனை செய்த நிலையில், தற்போது இந்த சாதனையை, முறியடித்துள்ளது, மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல். 9 கோடியே 50 லட்சம் பார்வைகளைக் கடந்து 10 கோடியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இதனால் தற்போது ஆளப்போறான் தமிழன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும் 'ரௌடி பேபி' பாடல்16 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இவ்வளவு குறுகிய நாட்களில் எந்த ஒரு தமிழ்ப் படப் பாடலும் இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியதில்லை என கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோரது பாடல்கள்தான் யு டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்று வந்தது. தற்போது குறிகிய தினங்களில் யுவன் பாடல் இந்த அளவிற்கு மிக வைரலாக பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.