சோலோவாக வந்த சர்காரே 11 நாட்களில் 100 கோடி வரல இதுல விஸ்வாசத்துடன் வந்த பேட்ட 100 கோடி வந்துருமா?

By sathish kFirst Published Jan 19, 2019, 6:22 PM IST
Highlights

தீபாவளிக்கு  சோலோவாக வந்த தளபதியின் சர்கார் படமே 100 கோடியை 11 நாட்களில் கடக்கவில்லை என்கிற போது விஸ்வாசம் படத்துடன்  போட்டிக்கு வந்த பேட்ட 11 நாட்களில் 100 கோடி வசூல் வரும்?

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி ஏரியாக்களில் பேட்ட படம் அதிக திரையரங்குகள், அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டதால் வசூல் அதிகம். அதே நேரம் இந்தப் பகுதிகளில் விஸ்வாசம் படம் அதிகளவு அதிகாலை காட்சி திரையிடப்பட்டுள்ளது. ஆனால் பேட்ட படத்திற்கு அந்த வாய்ப்பு அமையவில்லை காரணம் படத்தின் நீளம். 

விஸ்வசம் படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு வாங்குவதற்கு அஜித் ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் குறைவான திரையரங்கு என்றாலும் முதல் நாள்  வசூலில் பேட்டயை அடித்து தூக்கி அந்தரத்தில் தொங்கவிட்டது விஸ்வாசம்.   

ரிலீஸ் அன்று தமிழகத்தில் அதிக விலைக்கு விஸ்வாசம் பட டிக்கட்டுகள் விற்பனையானதில் முதலிடத்தில் கோயம்புத்தூர் ஏரியா உள்ளது. கோவை ஏரியாவில் பொறுத்தவரை தியேட்டர்களை இரண்டு படங்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க  விநியோகஸ்தர் முயற்சித்தார். ஆனால், தியேட்டர் ஓனர்கள் விஸ்வாசம் படத்தை திரையிட அதிக ஆர்வம் காட்டியதால் அதற்கு பேட்ட படத்தை காட்டிலும் 10% திரைகள் அதிகம் கிடைத்தது. காரணம் ரஜினியின் கடந்த மூன்று படங்கள் பலத்த நஷ்ட்டம் ஏற்பட்டதால் வந்த விளைவு.  அதனால் இங்கும் வசூலில் விஸ்வாசம் முதலிடம் வகித்து வருகிறது.  

அடுத்ததாக, திருப்பூரில் ஒரு தியேட்டரில் சர்கார் படம் 4 வாரங்களில் 17 லட்சம் ரூபாய் நிகர வசூலித்தது. அதே தியேட்டரில் விஸ்வாசம் 8 நாட்களில் 26 லட்ச ரூபாய் நிகர வசூலாக கடந்து சாதனை படைத்துள்ளது.  இதேபோல பல தியேட்டர்களில் விஸ்வாசம் அசால்ட்டாக சாதனை நிகழ்த்தியதற்கு அஜித் ரசிகர்களே காரணம் என சொல்லப்படுகிறது.

அஜித் ரசிகர்கள் அதிகம் இருப்பது வட - தென்னாற்காடு தான்,   விஸ்வாசம் படத்தின் விநியோகஸ்தர்களின் கட்டுப்பாட்டில் 70% தியேட்டர்கள் இங்கு இருப்பதால்  அஜித்  வசூலில் அதகளம் பண்ணியது. அதுமட்டுமல்லாமல் பேட்ட வசூலை டபுள் ஆக அடித்து தூக்கியது.

சேலம் ஏரியாவில் 63 திரைகளில் விஸ்வாசம் 52 திரைகளில் பேட்ட திரையிடப்பட்டதால் இங்கும் வசூலில் விஸ்வாசம் முந்தி கொண்டதால், ஏழு நாட்களில் பேட்ட ஐந்து கோடி  மொத்த வசூல் செய்திருக்கிறது. 6.78 கோடி  மொத்த வசூல் செய்திருக்கிறது. 

மதுரை ஏரியாவில் அதிக திரைகளை ஆக்கிரமித்த விஸ்வாசம் தான், பேட்ட படத்திற்கு குறைவான திரைகளே கிடைத்ததால் பேட்ட 7.28 கோடி ரூபாய் மொத்த வசூலாக பெற்றது. அஜித் படத்திற்கு சிறப்புக் காட்சிகள், ரசிகர் மன்ற காட்சிகள் என திரையிடப்பட்டு 11.68 கோடி  வசூலாக அள்ளியிருக்கிறது. 

இதற்கடுத்ததாக திருச்சி விநியோக பகுதியில் நகர்ப்புறங்களில் உள்ள முக்கியமான திரைகளில் பேட்ட திரையிடப்பட்டது. பேட்ட 5 கோடியே 26 லட்சத்தை மொத்த வசூலாகக் குவித்திருக்கிறது. அதை விடச் சற்று குறைவான திரைகளில் திரையிடப்பட்ட விஸ்வாசம்  6கோடியே 18 லட்சம் ரூபாயை மொத்த வசூல் செய்திருக்கிறது. 

மொத்தத்தில் முதல் வார முடிவில் இரண்டு படங்களுமே ஆச்சர்யப்படத்தக்க, எதிர்பாராத மொத்த வசூலை கடந்திருக்கிறது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்திற்கு குடும்பங்கள் கூட்டமாக வந்து பார்த்த அதிசயம் நிகழ்ந்ந்ததால் விஸ்வாசம் வெற்றிக் கொடியை பறக்க விட்டிருக்கிறது. 

தேவையில்லாமல் அஜித்துடன் மோதிய ரஜினி தனக்கிருந்த மவுசை குறைத்துக் கொண்டது தான் மிச்சம், விஸ்வாசம் முதல் வார முடிவில் சுமார் 70 கோடி ரூபாயை மொத்த வசூலாகப் பெற்றுள்ளது. பேட்ட சுமார் 58 கோடியை மொத்த வசூலாகக் குவித்திருக்கிறது.  

click me!