
பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் பிறந்த நாள் அன்று அவருடைய மனைவி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, சர்பிரைசாக கேக் வெட்டி, அவருக்கு தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கியவர் ரோபோ ஷங்கர். மெல்ல மெல்ல, தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டு, தற்போது தனுஷ், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.
அதே போல் அவருடைய மனைவி சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் அசத்தி வருகிறார். விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பிகில்' படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கணவரின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், ரோபோ ஷங்கரின் மனைவி, மற்றும் மகள் இருவரும் கேக் வெட்டி கொண்டாடியதோடு, தங்க சங்கிலியைக்கும் பரிசாக கொடுத்துள்ளனர். ரோபோ சங்கரின் பிறந்தநாள் முடிந்து சில தினங்கள் ஆன போதிலும்... இந்த குடும்பத்தின் பாசம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.