
பிக்பாஸ் பிரபலங்களை பொருத்தவரை அவர்கள், எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி 100 நாள் மக்கள் முன், விளையாடி... மக்கள் மற்றும் அவர்களுடைய ரசிகர்கள் போட்ட ஓட்டுகள் மூலம் தங்களுடைய வெற்றியை கண்டனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை விட, சீசன் 3 நிகழ்ச்சி பல ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில், சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற, முகேனின் தந்தை, நேற்றைய முன் தினம், அதாவது 27 ஆம் தேதி, மாலை திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அவருடைய ரசிகர்களை மட்டும் இன்றி, பிக்பாஸ் பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பலர் முகேனின் தந்தை பிரகாஷ் ராவ்விற்கு, சமூக வலைத்தளம் மூலமாக தங்களுடைய இரங்கலை தெரிவித்து வந்தனர்.
இந்த சோகமே இன்னும் மறையாத நிலையில், தற்போது சாண்டியில் வீட்டில் அடுத்த சோக சம்பம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சாண்டியின் மனைவி சில்வியாவின் அப்பா, நேற்று உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளார்.
இதனால், சாண்டியின் குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். அதே சமயம் சாண்டிக்கு அவருடைய ரசிகர்களும், நண்பர்களும் தொடர்ந்து பலர் ஆறுதல் கூறிவருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.