நடிகர் ஆர்.கே.சுரேஷ் திருமணம் நின்றது..! உறுதிப்படுத்திய திவ்யா..!

 
Published : Feb 09, 2018, 04:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
நடிகர் ஆர்.கே.சுரேஷ் திருமணம் நின்றது..! உறுதிப்படுத்திய திவ்யா..!

சுருக்கம்

rk suresh marriage stoped

பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், கடந்த வருடம் சீரியல் நடிகை திவ்யாவை திருமணம் செய்ய உள்ளதாக கூறினார். ஆனால் அதற்க்கு பின் இவர்கள் இவருடைய திருமணம் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர்களுடைய திருமணம் நின்று விட்டதாக கூறப்படுகிறது நடிகை திவ்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆர்.கே.சுரேஷ்:

சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தான் மூலமும் பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்ததாலும்  சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ். பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த, 'தாரதப்பட்டை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

 

நடிகர் அவதாரம்:

முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து பல படங்களில் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். விரைவில் இவர் கதாநாயகனாக நடித்த 'பில்லா பாண்டி' படம் வெளியாக உள்ளது.

திருமணம்:

திரைத்துறையில் நடிகராக சாதித்துவிட்ட இவர் பிரபல தொலைகாட்சியில் 'சுமங்கலி' சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த வருடம் அறிவித்தார்.

ஆனால் 6மாதத்தை கடந்தும் இவர்கள் திருமணம் நடைப்பெறாததால், திருமணம் நின்று விட்டதாகக் கூறப்பட்டது. அதற்கு ஆர்.கே.சுரேஷ் இருவருக்கும் ஜாதகத்தில் கிரக நிலை சரியில்லாததால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

திருமணம் குறித்து பேசிய திவ்யா:

இந்நிலையில் இந்த திருமணம் நின்று விட்டதாக கூறியுள்ளார் திவ்யா... இது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள அவர்   எங்கள் இரண்டு பேருக்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது.

கல்யாணம் முடிந்ததும் அந்த கருத்து வேறுபாடு அதிகமாகி பிரிவதைவிட முன்பே பேசிப் பிரிவது நல்லது என்று தோன்றியது. அதனால் இரண்டு வீட்டிலும் சொல்லி பிரிந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ