பியார் பிரேமா காதல் படத்தின் அப்டேட்....ஹரிஷ் கல்யாண் தகவல்..

 
Published : Feb 09, 2018, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
பியார் பிரேமா காதல் படத்தின் அப்டேட்....ஹரிஷ் கல்யாண் தகவல்..

சுருக்கம்

Pyar Pramma is the update of romance Harish Kalyan Information

பிக்பாஸ்

கடந்த ஆண்டு மக்களை பரபரப்பாக வைத்திருந்த வைத்திருந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த  நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் மார்க்கெட் இல்லாமல் இருந்த ஓவியா பிரபலமானார்.சமூக வலைத்தளங்களில் அவருக்கென்று தனியாக ரசிகர் கூட்டம் உருவானது.மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது பிரபலமான ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.தற்போது அவர் உத்தமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதில் அவர் கிழவியாக தோன்றும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இருவர் மேக்கப் அழகி ரைசா வில்சன், மற்றும் ஹரிஷ் கல்யாண்.

பியார் பிரேமா காதல்

இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.படத்திற்கு ”பியார் பிரேமா காதல்” என்று படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இளன் என்ற புதுமுக இயக்குநர் இந்த படத்தை இயக்கி வருகிறார். ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ராஜராஜனும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். 

காதல் கலந்த காமெடி படமாக உருவாகி கொண்டிருக்கும் இப்படத்திற்கு படத்ட்தை தயாரிக்கும் யுவனே இசையமைக்கிறார்.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காதலர் தினம் ஸ்பெஷல்

வரும் 14 ம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.இந்த தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.இதனை முன்னிட்டு படத்திற்கான போஸ்டர் நாளை வெளியாகிறது.இதுகுறித்து படத்தின் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.

 

அப்டேட்

பியார் பிரேமா காதல் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.மேலும் மோஷன் போஸ்டருடன் பல அப்டேட்ஸ்களும் வர இருப்பதாக அவர் கூறியுள்ளார்.உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் பொறியாளன், வில் அம்பு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக சர்ச்சைக்குரிய சிந்து சமவெளி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ரைசா வில்சன் இதற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி2 படத்தில் கஜோலின் பி.ஏ வாக நடித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!