ஆர்.கே. சுரேஷ் திருமணம் நின்று விட்டதா? வெளியான பரபரப்பு தகவல்!

 
Published : Dec 29, 2017, 07:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
ஆர்.கே. சுரேஷ் திருமணம் நின்று விட்டதா? வெளியான பரபரப்பு தகவல்!

சுருக்கம்

rk suresh marriage issue

இயக்குனர் பாலா இயக்கத்தில் 'தாரதப்பட்டை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகம் ஆனவர் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ். இதை தொடர்ந்து மருது, 'பள்ளி பருவத்தினிலே' உள்ளிட்ட படங்களில் நடித்து நடிப்பிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது இவர் 'பில்லா பாண்டி', 'வேட்டை நாய்' போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட்டி தான் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அறிவித்தார். மேலும் இவர் திருமணம் செய்துக்கொள்ள பார்க்கப்பட்ட பெண் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மகாலட்சுமி' என்கிற தொடரில் நாயகியாக நடித்து வரும் திவ்யா என்பவர்.

இவர்கள் திருமணம் குறித்து அறிவித்து பல மாதங்கள் ஆன பின்பும் இது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாததால் இவர்களுடைய திருமணம் நின்று விட்டாதாக ஒரு சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்ததாக கூறப்பட்டது.

தற்போது இதற்கு விளக்கம் கொடுக்கும் விதத்தில் ஆர்.கே.சுரேஷ் தரப்பில் இருந்து கூறியுள்ளதாவது... ஜாதகத்தில் ஒரு சில கிரகம் தற்காலிகமாக சரியாக அமையாததால் திருமணத்தை தற்போது தள்ளி வைத்துள்ளதாகவும். அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்